இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விக்கிரவாண்டி பள்ளி விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி 6ம் தேதி அரசுக்கு மனு அளித்து விட்டு அரசுக்கு அவகாசம் வழங்காமல் 13ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்ததன் மூலம், பொது நல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை மனுதாரர் தவறாக பயன்படுத்தியுள்ளார்.
மனுவில் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அடைப்பை சரி செய்ய செப்டிக் டேங்க் திறந்து வைத்திருக்கலாம். அதற்கு அரசை எப்படி குறை கூற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வழக்கை மனுதாரர் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருந்தபோதிலும், வழக்கு வாபஸ் பெறப்பட்டதை ஏற்று தள்ளுபடி செய்தாலும், மனுதாரரின் விண்ணப்பத்துக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post பள்ளி பாதுகாப்புக்கு குழு 1 வாரத்தில் பதில் ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.