தினகரன் கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம் என்பதற்கு தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி: மாணவர்கள் உற்சாக பேட்டி

சென்னை: சென்னை தினகரன் கல்வி கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் அளித்த உற்சாக பேட்டி வருமாறு:
ஆகாஷ் (விழுப்புரம்): நான் விழுப்புரம் அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்தேன். சென்னையில் இந்த எக்ஸ்போ நடப்பது குறித்து தெரிந்தவர் மூலம் கேள்விப்பட்டு அங்கிருந்து சென்னை நண்பர்களுடன் தினகரன் எக்ஸ்போக்கு வந்தேன். எந்த குரூப் எடுக்கலாம் முடிவு எடுக்காமல் இருந்தேன். இங்கு வந்து எல்லா குரூப் பற்றியும் தெரிந்துகொண்டேன். ஆனால் நான் பிசிஏ, கம்ப்யூட்டர் குரூப் சம்பந்தமாக படிக்கலாம்னு முடிவு எடுத்துள்ளேன்.

சரண்யா (போரூர்): நான் போரூரில் இருந்து வருகிறேன். அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன். தினகரன் பத்திரிகையில் வந்த விளம்பர செய்தியை பார்த்து எனது பெற்றோருடன் வந்து கலந்துகொண்டேன். நான் இன்ஜினியரிங் படிக்கலாம் என்று இருந்தேன். இங்குள்ள மருத்துவ கல்வி நிறுவனத்தினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் மெடிக்கல் படிக்க முடிவு செய்துள்ளேன். என் பெற்றோரும் என் விருப்பத்தை ஏற்றுள்ளனர்.

விஜயஸ்ரீ (முகலிவாக்கம்): நான் முகலிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்துள்ளேன். இந்த தினகரன் கல்வி கண்காட்சி குறித்து எனது தோழி மூலம் அறிந்து என் அம்மாவுடன் வந்தேன். நான் பிஎஸ்சி படிக்கலாம் என்று எண்ணி இருந்தேன். இங்கு வந்த பிறகு ஸ்டாலில் உள்ளவர்கள கொடுத்த ஆலோசனையின் பேரில் இன்ஜினியரிங் படிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். அதேயே படிப்பேன்.

ராஜேஸ்வரி (பூந்தமல்லி): இந்த கல்வி கண்காட்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் இருக்கிறது என்பது குறித்து தெளிவாக அறிய முடிந்தது. அனைத்து கல்லூரிகளில் சேர்ந்தவர்களும் தங்கள் கல்லூரியில் உள்ள சிறப்பம்சங்கள், தற்போது எந்தெந்த படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது, வேலைவாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

பிரியதர்ஷினி (திருவான்மியூர்): எந்த கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதோடு எந்தெந்த நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளது உள்ளிட்டவைகள் குறித்து அறிய முடிந்தது. பொதுவாக கல்லூரிகளில் விசாரித்தால் கட்டணம் பற்றி எல்லாம் கூற மாட்டார்கள். ஆனால் இங்கே கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

சஞ்சய் குமார் (ஆதம்பாக்கம்): இந்த கல்வி கண்காட்சியில் ஸ்டால்களில் உள்ள கல்லூரி நிறுவனங்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எந்த குரூப் படிக்கலாம் என்று முடிவெடுக்கவில்லை. வீட்டுக்கு சென்றவுடன் கல்லூரிகள் கொடுத்த ஆலோசனைகள் மற்றும் தகவல்களை பெற்றோரிடம் கலந்து பேசி முடிவெடுத்து என்னுடைய படிப்பை தேர்ந்தெடுப்பேன். இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

The post தினகரன் கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம் என்பதற்கு தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி: மாணவர்கள் உற்சாக பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: