இதனையடுத்து உறவினர்கள் ஊரணிக்கு சென்று, கரைப்பகுதியில் தேடியுள்ளனர். அப்போது அவர்களின் ஆடைகள் மட்டும் கரையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வீரர்கள் ஊரணியில் இறங்கி தேடிப் பார்த்தனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு இரவு 9 மணியளவில் கார்த்திக் ராஜா மற்றும் சர்மிளா சடலமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஒருவர் சேற்றில் சிக்கி, மற்றவர் காப்பாற்றும்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஊரணியில் மூழ்கி புதுமண தம்பதி பலி appeared first on Dinakaran.