புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததால் தோட்டத்திலேயே தர்பூசணி பழங்கள் அழுகி வருவதால் தர்பூசணியை விளைவித்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் விவசாயிகள் சிலர் அவருகளுக்கு சொந்தமான நிலத்தில் கோடை காலத்தில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணி பழத்தை விளைவித்துள்ளனர்.வட்டிக்கு வாங்கி செலவு செய்து தர்பூசணி பழத்தை விளைவித்த நிலையில் அந்த தர்பூசணி பழங்களை 55 லிருந்து 70 நாட்களுக்குள் தோட்டத்திலிருந்து வெட்டி கொள்முதலுக்கு எடுக்க வேண்டும்.
ஆனால் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களில் வரத்து அதிகரிப்பால் வயல்களில் விளைவித்த தர்பூசணிகளை 80 நாட்கள் ஆகியும் வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன் வராததால் அந்த தர்பூசணி பழங்கள் தோட்டத்திலேயே அழுகி வருவதால் செய்வதறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதே போல் அந்த பகுதியில் தர்பூசணி பழங்களை விளைவித்த விவசாயிகளிடமிருந்து தர்பூசணி பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரக்கூடிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
தற்போது தோட்டத்திலேயே அழுகி வரும் தர்பூசணி பழங்களை வேளாண் துறையினர் கணக்கீடு செய்து விவசாயிகளின் இழப்பீட்டை ஈடுகட்ட தமிழ்நாடு அரசிடமிருந்து போதிய நிவாரணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஒரு நாள் மழை, மறுநாள் வெயில் தர்பூசணிகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயக்கம் appeared first on Dinakaran.