குன்னம், மார்ச் 21: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அரசு அனுமதியின்றி கவுல்பாளையம் கிராமத்தில் டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு குன்னம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த கவுல் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் அர்ஜுன்(25) என்பவரை விசாரித்தபோது அரசு அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்தது தெரிய வந்தது.
மேற்படி நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.16,000 மதிப்புள்ள 7.5 யூனிட் மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்த னர்.மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தனர்.
The post குன்னம் அருகே லாரியில் கிராவல் மண் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.