குடும்ப அட்டை உறுப்பினர்கள் வரும் 31-க்குள் கைரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

 

பெரம்பலூர், மார்ச் 19: குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகையை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுவரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதார்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையினை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்.

மேலும், பிறமாநிலம் மற்றும் மாவட்டங்களில் வேலை நிமித்தமாகவும், கல்லூரி படிப்பிற்காக தங்கியுள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆதார் நகலுடன் சென்று e-KYC பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், நியாய விலைக் கடை விற்பனை முனைய இயந்திரத்தில் e-KYC பதிவு செய்யும்போது விரல் ரேகை பதிவு ஆகாத நபர்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது கைரேகையினை புதுப்பித்த பின்பு e-KYC பதிவுசெய்து கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தங்களது கைரேகையினை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்கள் கட்டாயம் தங்களது கைரேகை பதிவினை வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும் என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post குடும்ப அட்டை உறுப்பினர்கள் வரும் 31-க்குள் கைரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: