பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை 74 வது முழுநிலவு கூட்டம்

 

பெரம்பலூர், மார்ச் 15: பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் 74 ஆவது முழுநிலவுக் கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் 74 ஆவது முழுநிலவுக் கூட்டம், பேரவையின் செயலாளர்‌ ஓவியச்செம்மல் முகுந்தன் வரவேற்றுப் பேசினார். பேரவையின் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிச்சிட்டு‌வேல்.இளங்கோ தலைமை வகித்துப் பேசினார். திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்க.கமல் கலந்து கொண்டு பாவாணரும் பைந்தமிழும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இணைச் செயலாளர் பாவலர் சிற்றரசு நன்றி கூறினார். புரவலர் வழக்கறிஞர் கோவிந்தன் வங்கி‌ஆறுமுகம், கவிஞர் தேனரசன், சிவானந்தம், திக மாவட்டத் தலைவர் தங்கராசு, அரங்க நாடன், வைகைமாலா, மாணவ ரணி இளைஞர்கள் திரளாகக் பங்கேற்றனர். பூவை தமிழோவியனும் அறிவு மழையும் பகுத்த றிவுப்பாடல்களை பாடினர்.

The post பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை 74 வது முழுநிலவு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: