வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் தாவரவியல் மன்ற விழா நடைபெற்றது

 

பெரம்பலூர், மார்ச் 18: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் மன்ற விழா நேற்று நடை பெற்றது. கல்லூரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம் கலந்து கொண்டு தாவரவியல் மாணவர்களுக்கான மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறந்து விளங்க தேவைப்படும் திறன் மற்றும் தேர்வுகள் குறித்து உரையாற்றினார்.

விழாவில், கணினி அறிவியல் துறைதலைவர் சகாயராஜ் வாழ்த்துரை வழங்கினார். துறைத் தலைவர் ராமராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சிகளை, மாணவி ஈஸ்வரி தொகுத்துப் பேசினார். மாணவி விஜய மாலதி விருந்தினர்களை வரவேற்றார். முதலாம் ஆண்டு மாணவி செல்வி வைஸ்ணவி நன்றியுரை கூறினார்.

The post வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் தாவரவியல் மன்ற விழா நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: