பெரம்பலூர், மார்ச் 14: பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் சார்பாக குரூப் 4 மாதிரி போட்டி தேர்வு 17,19ம் தேதிகளில் நடைபெற உள்ளது என்று மாவட்ட மைய நூலக அலுவலர் முத்துக் குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் சார்பாக குரூப்-4 மாதிரி போட்டி தேர்வு இந்த வாரத்திற்கு வருகிற 17ம் தேதி மற்றும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
பெரம்பலூர் புது பஸ்டாண்டு தென்புறம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகம் எதிரே இயங்கி வரும், மாவட்ட மைய நூலகத்தில், வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமையும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை குரூப்-4க்கான மாதிரி போட்டி தேர்வு நடைபெறும்.17ம் தேதி நடைபெறும் மாதிரி போட்டி தேர்வில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,000, இரண்டாம் பரிசாக ரூ.750, மூன்றாம் பரிசாக ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை போட்டி தேர்வு பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 மாதிரி போட்டி தேர்வு appeared first on Dinakaran.