பெரம்பலூர், மார்ச் 13: வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் கணினி அறிவியல் மன்ற விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (12ம் தேதி) காலை 10.30 மணியளவில் கணினி அறிவியல் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரியின் (பொ) முதல்வர் சேகர் தலைமை வகித்து பேசினார். கணினி அறிவியல் இணைப் பேராசிரியர் ராமராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்தினார்.
கணினியின் பயன் பாடுகள் குறித்து கணினி அறிவியல் துறைத் தலைவர் சகாயராஜ் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ADNOVA.AI மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பிரவின்ராஜ் கலந்து கொண்டு, மாணவர்கள் கணினி அறிவியல் துறையில் சிறந்துவிளங்க திறன் மற்றும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றிட விழிப்பணர்வு உரையாற்றினார். விழாவில் பல்கலைக் கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பி.எஸ்ஸி மூன்றாமாண்டு மாணவி ரத்தினேஸ்வர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் அலுவல கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எஸ்ஸி கணினி அறிவியல் 2ம் ஆண்டு மாணவர் ராகுல் வரவேற்றார். பி.எஸ்ஸி கணினி அறிவியல் 3ஆம் ஆண்டு மாணவர் பிரசாத் நன்றி தெரிவித்தார். தாகத்தை தணிக்க தர்பூசணி, முலாம்பழங்கள் முண்டியடித்துக் கொண்டு விற்பனைக்கு வந்து விட்டன. சர்பத்துக்கு போட்டியாக ஃப்ரூட் மிக்சர், ஐஸ்கிரீம்கள் அணி வகுத்து நிற்கின்றன.
The post வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் கணினி அறிவியல் மன்ற விழா appeared first on Dinakaran.