பெரம்பலூரில் அதிக பணம் தருவதாக 80 பேரிடம் ரூ.15 லட்சம் வசூலித்த 2 பெண்கள்

 

பெரம்பலூர், மார்ச் 18: பாலிசி பிடிக்கிறோம் எனக் கூறி 80-பேரிடம் ரூ.15 லட்சத்திற்குமேல் வசூல் செய்து, 12 வருடங்களாக கட்டிய தொகையை தரமறுப்பதாக பாதிக்கப்பட்ட செல்லியம் பாளையம் கிராமப் பெண்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், நேற்று காலை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட, செல்லியம்பாளையம், மேற்குத்தெருவை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் மேற்கு தெருவில் வசிப்போரிடம் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 2- பெண்கள் பாலிசி போடுங்கள் 5 வருடம் முடிந்ததும் சேமிப்பு மற்றும் இழப்பீடு இரண்டும் உண்டு எனக்கூறி 80-பேரிடம் பாலிசி பிடித்தனர்.

ஒரு நபருக்கு ரூ.1000, ரூ.600, ரூ.300 என 3- வகையாக, 3-வருடம் இந்த பாலிசித் தொகையைக் கட்டியுள்ளோம். 2013 இல் இருந்து 2025 வரை 12 வருடங்கள் ஆகிறது. ஆனால், கட்டியத் தொகைக்கான பதிலும் கூறவில்லை. பணத்தைக் கேட்டால் கேஸ் நடக்கிறது என்றுகூறி எங்கள் பணத்தைத் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் தான். எங்கள் வீட்டில் இது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் இது தொடர்பாக விசாரணை நடத்தி, நாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரி வித்துள்ளனர்.

The post பெரம்பலூரில் அதிக பணம் தருவதாக 80 பேரிடம் ரூ.15 லட்சம் வசூலித்த 2 பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: