பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், மார்ச் 15: பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு 2025 – 2026 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6,750ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலையில் முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சின்னதுரை வரவேற்றார். சங்கதின் மாவட்ட துணைத்தலைவர் சிவகலை, சுப்பிரமணியன், புலிக்குட்டி, சுந்தர்ராஜன், சாந்தப்பன், ஆறுமுகம், மாணிக்கம், ராஜேந்திரன், செல்வராசு, செல்வகுமாரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் பால்சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள்மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை, மாவட்டத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஆளவந்தார் சிறப்புரை பேசினார்.

நிகழ்ச்சியில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு 2025 – 2026 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6,750ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள், தலையில் முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

The post பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: