பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலை.முதுகலை விரிவாக்க மையத்தில் தொழில்முனைவோர் அமைப்பு துவக்கம்

 

பெரம்பலூர்,மார்ச் 15: பெரம்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு தொழில் முனைவர்களுக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர்பந்தல் பகுதியில், அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் அருகே இயங்கி வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் நேற்று மாணவர்களுக்கு \”ஆண்டர் பிரண்ட்ஷிப் டெவலப்மெண்ட் செல்\” எனப்படும் தொழில் முனைவோர்களுக்கான அமைப்பு புதிதாக தொடங்கப்பட்டது.

இதற்கான தொடக்க விழாவிற்கு, பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தின் இயக்குனர் டாக்டர் மாலதி தலைமை வகித்துப் பேசினார். பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெசிந்தா வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.என். ஸ்டுடியோ அண்ட் வீடியோஸிலிருந்து நிஷருதீன் என்பவர் கலந்து கொண்டு, ஆர்ட் ஆஃப் டேக்கிங் போட்டோஸ் அண்ட் வீடியோஸ் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு \”ஆனந்த் த ஸ்பார்ட் போட்டோ\” எடுக்கும் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் அர்ச்சனா விழா நிகழ்ச்சிகளை தொகுத்து பேசினார். நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலை.முதுகலை விரிவாக்க மையத்தில் தொழில்முனைவோர் அமைப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: