பெரம்பலூர், மார்ச் 19: பெரியம்மாபாளையம் கிராமத்தில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு எம்எல்ஏ பிரபாகரன் நிவாரண உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், பெரியம் மாபாளையம் கிராமத்தில், பெரியசாமி, கருப்பாயி, சடையன் உள்ளிட்ட 4 பேர் வீடுகள் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமானது. தகவலறிந்து வந்த எம்எல்ஏ பிரபாகரன், தீ விபத்தால் பாதித்த வீட்டின் உரிமையாளர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார்.பின்னர், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகையை எம்எல்ஏ பிரபாகரன் வழங்கினார்.
மேலும், தனது சொந்த செலவில் தலா ஒரு சிப்பம் அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்கள், வேஷ்டி, சேலை, போர்வை, பாய், தலையணை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.நிகழ்ச்சியின்போது, வேப்பந்தட்டை தாசில்தார் மாயகிருஷ்ணன், வேப்ப ந்தட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்ராம லிங்கம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரெங்கராஜ், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்டநெசவாளர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post பெரியம்மாபாளையத்தில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் appeared first on Dinakaran.