பெரம்பலூர், மார்ச் 13: பெரம்பலூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பில் ஒற்றை அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று (12ஆம் தேதி) ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, தங்களுக்கு காலமுறை ஊதியம் பெற்றுவரும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அந்தந்த மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம்முன்பு நேற்று பெரம்பலூர் மாவட்டதமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காமராஜர் தலைமையில்,ஒற்றைக் கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தி கோசமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காமராஜர் கூறுகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்த உள்ளோம். இதில் மாநில அளவில், இனறைக்கு முதல் கட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 4ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையரகத்தின் முன்புபெருதிரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
மேலும் ஏப்ரல் 21ம் தேதி முதல் சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகம் முன்பு, எங்களது கோரிக்கையை அரசுக்கு முன்வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 121 ஊராட்சிகளில் பணி புரியும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார். ஊராட்சி செயலர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலுல் ஊராட்சி மன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
The post பெரம்பலூரில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.