பெரம்பலூர்,மார்ச்.18: பெரியம்மாபாளையம் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திமுக மாவட்ட செயலாளர் ஜெகதீசன் நிவாரணஉதவி வழங்கினார். வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், பெரியம்மா பாளையம் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் பெருமாள் மனைவி கருப்பாயி(55), பிச்சையன் மகன் சடையன் (70), சேட்டு மகன் மோகன் (37), பொன்னையா மகன் பெரியசாமி(56) ஆகிய நான்கு குடிசை வீடுகள் தீ விபத்தால் எரிந்து சேதமாகின.
இதனையறிந்து, அவர்களுக்கு திமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிவாரணப் பொருட்களைவழங்கினார். நிகழ்ச்சியின்போது, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்ல தம்பி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரெங்க ராஜ்,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில் நுட்பஅணி அமைப்பாளர் சுல்தான் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
The post பெரியம்மாபாளையத்தில் தீ விபத்தால் பாதித்தவர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவாரணம் வழங்கல் appeared first on Dinakaran.