வாகனங்களுக்கு இ-செலான் இணக்க கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வழிகாட்டு நெறிமுறை

 

பெரம்பலூர், மார்ச் 14: பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி பொதுச்சாலையில் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு E-challan இணக்க கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு தெரிவிக்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,போக்குவரத்து விதிகளை மீறி பொதுச்சாலையில் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு நிலுவையிலுள்ள ஆன்லைன் இணக்க கட்டணங்கள் (E-challan) உடனடியாக செலுத்திட போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக கூடுதல் போக்குவரத்து ஆணையர், சென்னை அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு ஆன் லைன் மூலமாக E-challan செலுத்துவதற்கு ஆதார் எண்ணில் உள்ள கைபேசி எண்ணை தங்களது வாகனம் பதிவு செய்யப் பட்டுள்ள வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களில் Parivahan இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post வாகனங்களுக்கு இ-செலான் இணக்க கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வழிகாட்டு நெறிமுறை appeared first on Dinakaran.

Related Stories: