ஜெயங்கொண்டம், மார்ச் 22: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவர்கள், அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நீர், மோர் பந்தல் திறந்து வைத்தனர்.
ஊர் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி உலக தண்ணீர் தினத்தை கொண்டாடினர்.
அது மட்டுமல்லாமல் நேற்று திருமானூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் சுந்தராம்பாள் தலைமையில் தண்ணீரைச் சேமிப்போம், வாழ்வைச் செழிப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .மேலும் தொடர்ந்து வேளாண்புல மாணவர்களால் நீரு என்ற தலைப்பில் இயக்கி நடித்த குறும்படம் பள்ளி மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.
The post திருமானூரில் வேளாண் கல்லூரி மாணவர்கள் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.