பாடாலூர், மார்ச் 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வரகுபாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் விஜயா தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் சுசீலா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சத்யா, துணைத் தலைவர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ரவி அனைவரையும் வரவேற்று பேசினார்.
பள்ளி ஆண்டு விழாவின் ஆண்டறிக்கையை ஆசிரியர் செல்வகுமார் வாசித்தார். வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி சிறப்புரையாற்றினார். இதையடுத்து பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் ஆசிரியர்கள் செல்வகுமார், சகினா, சுந்தரி, மாலதி, மேனகா, மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி தன்னார்வலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அம்பிகாபதி நன்றி கூறினார்.
The post அரசு பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.