தவலை அடை

தேவையானவை:

பச்சரிசி – 1 கப்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – இரண்டும் கலந்து ½ கப், உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயம் – 1 துண்டு,
உப்பு – தேவையான அளவு,
கடுகு – 1 டீஸ்பூன்,
சமையல் எண்ணெய் – ஒரு குழிகரண்டி.

செய்முறை:

அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கனமான கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு அது பொரிந்ததும் 2 கப் நீர் ஊற்றி, அது கொதி வந்ததும் ½ மூடி தேங்காய் துருவல் சேர்த்து, உப்பு, ரவையாக்கிய பருப்புகளை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி விடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் சிறு உருண்டை எடுத்து கட்லெட் போல் உள்ளங்கையில் வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் மொறுமொறுவென்று வேகவைக்கவும்.

The post தவலை அடை appeared first on Dinakaran.