1 கப் நறுக்கிய கேப்பேஜ்
5சாம்பார் வெங்காயம்
1டீஸ்பூன் மிளகாய் தூள்
2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
உப்பு தேவையான அளவு
தாளிக்க :
1டீஸ்பூன் எண்ணை
1/4 டீஸ்பூன் கடுகு
1/2உளுந்து பருப்பு
1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை
பர்ப்பிள் கேப்பேஜ்ச்சை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஸ்டவ்வில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் பொடியாக நறுக்கிய கேப்பேஜ்ச்சை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து, மிதமான சூட்டில் மூடி ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.இது மிகவும் விரைவில் வெந்துவிடும்.ஐந்து நிமிடங்கள் கழித்து தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால், மிகவும் சுவையான பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் சுவைக்கத்தயார்.
The post பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் appeared first on Dinakaran.