வாழைத்தண்டு அல்வா

தேவையானவை:

நறுக்கிய வாழைத் தண்டு – 2 கப்,
பால் – 1 கப்,
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்,
குங்குமப்பூ – சிட்டிகை.

செய்முறை:

நார் நீக்கிய வாழைத்தண்டை சிறிது வேகவிட்டு மிக்ஸியில் சற்று சூழற்றி வடிகட்டவும். அடி கனமான பாத்திரத்தில் பால், குங்குமப்பூ, அரைத்த விழுது சேர்த்து நன்கு வேகவிடவும். சர்க்கரை சேர்த்து, தேவைப்பட்டால் நெய்யில் முந்திரியை பொரித்து சேர்க்கலாம். அதிக சிரமமில்லாத, ஆரோக்கிய அல்வாவை உண்ணலாம். மேலும் குழந்தைகள் பொரியல், குழம்புகளை ஒதுக்கும் தருவாயில் இப்படி இனிப்பாக செய்து கொடுக்கலாம்.

 

The post வாழைத்தண்டு அல்வா appeared first on Dinakaran.