கேரள நெத்திலிமீன் குழம்பு

தேவையான பொருட்கள்

2பச்சை மிளகாய்
2 ஸ்பூன்மிளகாய் பொடி
கொஞ்சம்இஞ்சிதட்டியது
நெல்லிக்காய்அளவுகொடம்புளிorசாதா புளி
அரைஸ்பூன்மஞ்சள் பொடி
தேவைக்குஉப்பு
அரைக்க
1 கப்தேங்காய்துருவல்
6 சின்னவெங்காயம்

தாளிக்க

4 ஸ்பூன்தேங்காய்எண்ணெய்-
அரைஸ் பூன்கடுகு
10 கொத்துகருவேப்பிலை

செய்முறை:

முதலில் மீன்களை நன்கு கழுவி சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் இஞ்சி சதச்சது,மிளகாய்பொடி,போட்டு புளிகரைத்து ஊற்றவும்.பின் தேங்காய்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கையால் நன்கு கரைத்து விடவும்.உப்பு சேர்க்கவும்.பின் பச்சைமிளகாய் சேர்க்கவும்.நன்கு கொதிக்கும் போது மீன்களைக்குழம்பில் போடவும்.மீன்கள் உடனே வெந்து விடும். பின் ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும்.மண்சட்டி சூட்டிலேயே மீன்அழகாக வெந்துவிடும்.பின்வேறுவாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும். பின் மீன் குழம்பில்தாளித்ததை ஊற்றவும்.நெத்திலி மீன்குழம்பு ரெடி

The post கேரள நெத்திலிமீன் குழம்பு appeared first on Dinakaran.