1 கப் முருங்கைப்பூ
1/4 கப் சாம்பார் வெங்காயம்
1/4 கப் தேங்காய் துருவல்
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவுஉப்பு
தாளிக்க:
1 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு
1 டீஸ்பூன் கடலை பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
முருங்கை பூவை எடுத்து காம்புகளை நீக்கி சுத்தம் செய்து தயாராக வைக்கவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை,வற்றல் சேர்த்து பொரிந்ததும்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் முருங்கைப்பூவை சேர்த்து வதக்கவும்.அத்துடன் எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து,உப்பு சேர்த்து கலந்து விடவும்.அதில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின்னர் நன்கு கலந்து விட்டு,தேங்காய் துருவல், தேங்காய்,சோம்பு அரைத்த விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான முருங்கைப்பூ மசாலா வதக்கள் சுவைக்கத்தயார். இந்த முருங்கைப்பூ மசாலா வதக்கல் சாதம், மற்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
The post முருங்கைப்பூ மசாலா வதக்கல் appeared first on Dinakaran.