கிராமத்து கருவேப்பிலை மிளகு காளான்

தேவையான பொருட்கள்:

1 பாக்கெட் காளான்
1 பிடிச்சு கருவேப்பிலை (காயவைத்து பொடி செய்து கொள்ளவும்)
1 டீஸ்பூன் மிளகு தூள்
1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 பெரிய வெங்காயம்
5 சின்ன வெங்காயம்
1 தக்காளி
10 சிறிய கீற்று தேங்காய்
தேவைக்கு உப்பு
1 சிட்டிகை சர்க்கரை
3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 சிட்டிகை மஞ்சள் தூள்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை:

தேவை ஆன வற்றை எடுத்து வைத்து கொள்ள வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து கொள்ளவும்.பின்னர் சிறிது சோம்பு சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி, மஞ்சள் தூள்,உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி காளான் சேர்க்கவும்.பின்னர் அதில் பொடி செய்த கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.இறக்கும் பொது மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்

The post கிராமத்து கருவேப்பிலை மிளகு காளான் appeared first on Dinakaran.