2 கப்வட்டமாக நறுக்கின புடலங்காய்
1கப்கடலை மாவு
2டேபிள் ஸ்பூன்அரிசி மாவு
3/4 கப்தக்காளி விழுது
ருசிக்குஉப்பு
1 டீ ஸ்பூன்சமையல் சோடா
2 ஸ்பூன்தனி மி.தூள்
பொரிப்பதற்குதே.எண்ணெய்
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.தக்காளியை சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.புடலங்காயில் விதைகளை எடுத்து விட்டு, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.வாயகன்ற பாத்திரத்தில்,க.மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு ஸ்பூனால் நன்கு கலக்கவும்.அடுத்து, மி.தூள், சோடா உப்பு போட்டு கலக்கவும்.பிறகு, தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.கலந்த மாவில் புடலங்காயை கொஞ்சமாக போட்டு, நன்கு, தோய்த்துக் கொள்ளவும்.அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், தே.எண்ணெய் காய்ந்ததும்,மாவில் தோய்த்த புடலங்காயை போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து, தட்டில் எடுக்கவும்.இப்போது, சுடசுட, மிகவும் எளிதான,சுவையான,*புடலங்காய் பஜ்ஜி*தயார்.வித்தியாசமான, இந்த பஜ்ஜியை செய்து, ஈவ்னிங் நேரத்தை சிறப்பாக்கவும்.தே.எண்ணெயில் பொரிப்பதால் கூடுதல் சுவை.
The post புடலங்காய் பஜ்ஜி appeared first on Dinakaran.