1/2கி சிக்கன்
2பெரிய துண்டு பட்டை
4கிராம்பு
2பிரிஞ்சி இலை
4டேபிள் ஸ்பூன் ஆயில்
2பெரிய வெங்காயம்
2பெரிய தக்காளி
1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
1ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
தேவையானஅளவு உப்பு
1/4கப் தேங்காய்
1ஸ்பூன் சோம்பு
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை தாளிக்கவும்… அத்துடன் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்..அத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்… இஞ்சி பூண்டு வதங்கியதும் அத்துடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்… அதனுடன் இரண்டு மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.எல்லாம் சேர்ந்து வதங்கியதும் அதனுடன் சிக்கனையும் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.ஒரு வெங்காயத்தையும் ஒரு தக்காளியையும் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்… அதனை வதங்கிக் கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்க்கவும்.அது நன்றாக வதங்கி கொண்டிருக்கும் போது மிக்ஸி ஜாரில் தேங்காய் சோம்பு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து அதனையும் சிக்கனுடன் சேர்க்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு 15 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.15 நிமிடங்கள் கழித்து குழம்பு கெட்டியாகி இருக்கும் எண்ணையும் பிரிந்து வந்திருக்கும் அதுதான் பக்குவம்… இப்போது அடுப்பை அணைத்து விட்டு சூடாகப் பரிமாறவும்.சூடான சுவையான எளிமையான சிக்கன் குழம்பு தயார்
The post சிக்கன் குழம்பு appeared first on Dinakaran.