பிடி கொழுக்கட்டை – வெல்லம்

தேவையானவை:

உடைத்த அரிசி ரவை – 1 கப்,
நீர் – 2½ கப்,
வெல்லம் – (உடைத்தது) – 1½ கப்,
தேங்காய் துருவல் – ½ மூடி,
ஏலக்காய் பொடி – ½ கப்,
முந்திரி – 4 (சிறியதாக கிள்ளிக் கொள்ளவும்),
திராட்சை – 10.

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி வெல்லத்தை கரைய விட்டு வடிகட்டவும். பாகு காய்ச்ச அவசியமில்லை. வடிகட்டிய வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி, தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடவும். அதில் உடைத்து வைத்த அரிசி ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி ஏலப்பொடி மற்றும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து கலந்து சிறுதீயில் மூடி வைக்கவும். பிறகு ஆறியதும். கையால் பிடித்து ஆவியில் வைத்து எடுக்கவும். வெண்ணெய் அல்லது நெய் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.

 

The post பிடி கொழுக்கட்டை – வெல்லம் appeared first on Dinakaran.