1/2 கப் சம்பா கோதுமை ரவை
1 கப் தண்ணீர்
4டேபிள் ஸ்பூன் நெய்
1/2 கப் வெல்லம்
1/4கப் தேங்காய் துருவல்
1டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை
ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் சம்பா கோதுமை ரவையை சேர்த்து கலந்து, கெட்டியானதும் இறக்கிவைக்கவும்.வேறு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரை கப் வெல்லம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவைக்கவும்.கொதித்த வெல்லப்பாகில் தேங்காய் துருவல், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள், உப்பு, முந்திரி திராட்சை சேர்த்து கலந்து, முதலில் சமைத்து தயாராக வைத்துள்ள ரவை கலவை, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.நன்கு கலந்து கெட்டியானதும் இறக்கி, சூடு ஆறியவுடன் தேவைப்பட அளவில் உருட்டி, ஆவியில் வைக்கும் தட்டில் அடுக்கவும்.பின்னர் ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, கொதித்ததும், தயாராக உருண்டைகள் வைத்துள்ள தட்டை வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.இப்போது சத்தான, சுவையான, கோதுமை ரவை இனிப்பு கொழுக்கட்டை சுவைக்கத்தயார்.
The post கோதுமை ரவை கொழுக்கட்டை appeared first on Dinakaran.