கிராமத்து புடலங்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

2 கப்பொடியாக நறுக்கிய புடலங்காய்
1/4 கப்தேங்காய் துண்டுகள்
5ப.மிளகாய்
4 பல்பெரிய பூண்டு
1 டீ ஸ்பூன்ம.தூள்
1பெரிய வெங்காயம்
1 டீ ஸ்பூன்கடுகு
2 ஸ்பூன்சீரகம்
ருசிக்குகல் உப்பு
1 ஆர்க்குகருவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
சிறிதுதண்ணீர்

செய்முறை:

புடலங்காயை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். தேங்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிய மிக்ஸி ஜாரில்,தேங்காய், ப.மிளகாய், பூண்டு, சீரகம், சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும்.அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.பிறகு அரைத்த விழுது, ம.தூள் போடவும்.
நன்கு வதக்கவும்.நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.வதக்கியதும், புடலங்காயை போடவும்.5 நிமிடம் நன்கு வெந்ததும், சிறிது தண்ணீர் தெளித்து,மேலும் 5 நிமிடம் வேக விடவும்.ஒன்று சேர வெந்ததும்,அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான, சுலபமான,*கிராமத்து புடலங்காய் பொரியல் தயார்.

The post கிராமத்து புடலங்காய் பொரியல் appeared first on Dinakaran.