சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்

பாதி சுரைக்காய் நறுக்கியது
அரை கப் கடலை பருப்பு
3 வெங்காயம்
2 தக்காளி
4 பச்சை மிளகாய்
ஒரு டீஸ்பூன் சீரகம்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் சாம்பார் தூள்
ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
தேவையானதுஉப்பு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சுரைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு சிறிய குக்கரில் கடலை பருப்பு, சுரைக்காய் துண்டுகள், மஞ்சள் பொடி போட்டு முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.இப்பொழுது இன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இவைகளை போட்டு லேசாக வதக்கவும்.சிறிது வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும்.நன்கு வதக்கி வைக்கவும்.இப்பொழுது குக்கரில் கடலை பருப்பு சுரைக்காய் நன்கு வெந்திருக்கும்.இப்பொழுது சாம்பார் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி பத்து நிமிடம் கொதிக்க விடவும்.சுவையான காரமான சுரைக்காய் கூட்டு ரெடி. இதே சப்பாத்தி சாதம் இரண்டுக்கும் நன்றாக இருக்கும்.

The post சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு appeared first on Dinakaran.