பச்சரிசி மாவு – 1 கப்,
புளித்த மோர் – 2 கப்,
பெருங்காயத் தூள் – ½ டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு. (எல்லா பொருட்களையும் ஒன்றாக கரைத்து வைக்கவும்).
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
மோர் மிளகாய் – 4,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
சமையல் எண்ணெய் – ஒரு சிறிய கரண்டி அளவு.
செய்முறை:
ஒரு கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி மேற் கூறிய பொருட்களை தாளித்து, கரைத்து வைத்த மாவுக் கலவையை ஊற்றி அடுப்பை சிறியதாக வைத்து, கைவிடாமல் கிளறி விடவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது தேங்காய் எண்ணெய் தடவிய தட்டில் மாற்றி சமன்படுத்தி எண்ணெய் தடவிய கத்தியைக் கொண்டு வில்லைகள் போட்டு பரிமாறவும்.