நாளை காலை முதல் மகரவிளக்கு கால நெய்யபிஷேகமும் தொடங்கும். இன்று மதியத்திற்குப் பின்னர் மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் ஜனவரி 14ம் தேதி நடைபெறுகிறது. பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் எண்ணிக்கையை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த மண்டல காலத்தில் இங்கு 7 கவுண்டர்கள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படும். 60 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு ஒரு தனி கவுண்டரும் திறக்கப்படும்.
The post மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு appeared first on Dinakaran.