வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய மியான்மர் தெப்பம்

வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேட்டைகாரனிருப்பு கடற்கரையில் மூங்கிலால் கட்டப்பட்ட, மீன்பிடி தெப்பம் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து கடலோர காவல் குழும போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த தெப்பம் 40 அடி நீளம், 15 அடி அகலம், 8அடி உயரம், 100 மூங்கில்கள் கொண்டதாகவும், ஓலையால் ஒரு சிறிய அறை கட்டப்பட்டும் இருந்தது. தொடர் விசாரணையில், இந்த தெப்பம் மியான்மார் நாட்டில் மீன்பிடிக்க பயன்படுத்த கூடியது, காற்றின் வேகத்தால் அங்கிருந்து வேதாரண்யத்திற்கு அடித்து வரப்பட்டிருந்தது தெரிய வந்தது. கடந்தமாதமும் வேதாரண்யம் கடற்கரையில் மியான்மர் நாட்டு தெப்பம் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

The post வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய மியான்மர் தெப்பம் appeared first on Dinakaran.

Related Stories: