இந்நிலையில் கடல் பகுதியில் நேற்று அதிகாலை முதல் சூறைக்காற்று வீசி வருவதால் கடல் உள்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கோடியக்கரை பகுதியில் இருந்தும் மற்றும் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள 5,000 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலில் நீரோட்டம் அதிகமாக இருப்பதாலும், காற்று அதிகமாக வீசுவதாலும் மீன் பிடிக்க செல்ல ஒரு சில நாட்கள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
* கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து
கன்னியாகுமரியில் நேற்று புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தில் செல்ல முடியாது என்றாலும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து பாலத்தின் அருகில் சென்று ரசிக்க படகில் செல்வதற்கு டிக்கெட் எடுக்க காலை முதல் சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் குவிந்தனர். ஆனால் பலத்த சூறைகாற்று வீசியதால், கடலில் உயரமாக அலைகள் எழும்பி சீற்றமாக காணப்பட்டது. இதனால் நேற்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
The post கோடியக்கரையில் கடல் சீற்றம் 5,000 மீனவர்கள் முடக்கம் appeared first on Dinakaran.