கன்னியாகுமரி: திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (53). கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று காலை, நான்கு வழிச்சாலை ஓரமாக நடைபயிற்சியில் இருந்தார். அப்போது புத்தாண்டை கொண்டாட வந்த நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களை குரூப் போட்டோ எடுத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர்களின் செல்போனை வாங்கி அவர் போட்டோ எடுத்தபோது வேகமாக சென்ற கார் மோதி பலியானார்.
The post சுற்றுலா பயணிகளுக்கு போட்டோ எடுத்த பள்ளி ஆசிரியர் கார் மோதி பலி appeared first on Dinakaran.