அதேபோல், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பார்க்கும் பிரதமர் மோடியின் மனதில் அதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் புதைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை என்பது சாத்தியமற்றதாகும். ஏதாவது ஒரு மாநில அரசு கவிழ்ந்தால் அப்போது நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா. இந்தியாவிற்கு அழிவு என்று ஒன்று வந்தால் அது பாஜக ஆட்சியால் தான் நடக்கும். பட்ஜெட் கூட்ட தொடரில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிக்கும் என எண்ணுகிறேன்.
இந்த பொது சிவில் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் மதமுறைகள் படி திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதுபோல், இந்துத்துவா கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும் என பாஜக அரசு துடிக்கிறது. இதுமட்டுமின்றி, குலக்கல்வி திட்டத்தை அடிப்படையாக வைத்து தான் விஸ்வகர்மா திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன்படி, மோடி அரசு இந்தியாவை பாசிச நாடாக சர்வாதிகார நாடாக மற்ற நினைக்கிறார்.
இதேபோல், தமிழகத்தில் திமுகவை அகற்றுவரை செருப்பு அணிய போவதில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கான எனது பதில் நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை அகற்ற முடியாது; அகற்ற விடமாட்டேன். மேலும், நடிகர் விஜயின் வருகையால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதா என கேட்கப்படுகிறது. நடிகர் விஜயின் வருகை திமுக கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது.
எல்லோரும், எம்ஜிஆர் ஆகிவிடமுடியாது. புதிய கட்சிகள் ஆரம்பிப்பது என்பது அவர்களுடைய எண்ணம். யார் வேண்டுமானாலும் வரலாம்; கட்சி ஆரம்பிக்கலாம். மேலும், வரக்கூடிய 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
The post 200க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணி பிடிக்கும்: வைகோ பேட்டி appeared first on Dinakaran.