2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணியா? ஓபிஎஸ் பேட்டி

சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணி உண்டா என்று கேள்விக்கு, சிரித்துக்கொண்டே கொக்கியை போட்டு, என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே என்று கூறிவிட்டு, பதில் எதுவும் கூறாமல் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கட்சியிலிருந்து நீக்கப்படுவது விதிமுறை மீறல் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். அடுத்து அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதிமுக தொண்டர்களின் உரிமையை எம்ஜிஆர் ஏற்கனவே நிர்ணயம் செய்து உறுதி செய்துள்ளார். எம்ஜிஆரின் இதயத்தில் இருந்து எழுந்துள்ள அந்த கோரிக்கை, உறுதியாக நிறைவேற்றப்படும்.

விஜய் தனிக்கட்சி ஆரம்பித்து உள்ளார். அவருடைய எதிர்கால இலக்கு, எதை நோக்கி செல்கிறது என்பதை பார்த்த பின்பு தான், அவரைப் பற்றிய கருத்துகளை உறுதியாக கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யோடு கூட்டணி அமைத்து, நீங்கள் அவரோடு பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, சிரித்துக்கொண்டே, கடைசியாக ஒரு கொக்கியை தூக்கி போட்டு, கேள்வி கேட்கிறீர்களே என கூறிவிட்டு வேறு எதுவும் கூறாமல் சென்று விட்டார்.

The post 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணியா? ஓபிஎஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: