புதுச்சேரி: புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு, பொதுமக்கள் புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் கூடி, கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த அருள்பாண்டியன் (33), புத்தாண்டு கொண்டாடிவிட்டு போதையில் டூவீலரில் சென்றபோது, கோரிமேடு விநாயகர் கோயில் தெருவில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் அரியூரை சேர்ந்த தேவராஜ் (21) போதையில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே டூவீலரிலிருந்து விழுந்து உயிரிழந்தார். மேலும் விபத்தில் சிக்கி 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 வாலிபர்கள் பலி 43 பேர் படுகாயம் appeared first on Dinakaran.