தற்போது வரை 2 கட்டங்களாக 157 மாணவர்கள் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் 3ம் கட்டமாக உகாண்டா, நார்வே, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 38 அயலக தமிழ் மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த மாணவர்கள் நேற்று கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டு பண்பாட்டு பயண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார்.
சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மாணவர்களை வரவேற்றார். இது குறித்து அமைச்சர் கூறுகையில், மாணவர்களை சென்னை,திருச்சி, மதுரை, குமரி, நெல்லைக்கு அழைத்து சென்று தமிழர்களின் கலாச்சாரம் குறித்து விளக்கப்பட உள்ளது. வருகிற 11, 12ம் தேதிகளில் சென்னையில் அயலக தமிழர்கள் தின விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கின்றனர் என்றார்.
The post வேர்களை தேடி திட்டத்தில் அயலக தமிழ் மாணவர்கள் 38 பேர் தமிழகம் வருகை: குமரியில் அமைச்சர் நாசர் வரவேற்றார் appeared first on Dinakaran.