பாகிஸ்தானில் புதுப்பிக்கப்பட்ட இந்து கோயிலில் வழிபாடு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் காரக் மாவட்டத்தில் தேரி கிராமத்தில் மகாராஜ் பரம்ஹன்ஸ் ஜி 1919ம் ஆண்டு உயிரிழந்தார். புகழ்பெற்ற அவருக்கு இங்கு கோயில் உள்ளது. இந்த கோயில் 2020ம் ஆண்டு ஜமியத் உலமா-இ-இஸ்லாம் பஸ்வின் என்ற மதவாத அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவில் இருந்து 200, துபாயில் இருந்து 15 பக்தர்கள் மற்றும் அமெரிக்கா, வளைகுடா நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். இவர்கள் வாகா எல்லையை கடந்து ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இது குறித்து ஆளும் கட்சி எம்எல்ஏ ரமேஷ் குமார் வான்க்வானி கூறுகையில், “பாகிஸ்தான் அரசு வழிபாட்டு சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் இருந்து இந்து பக்தர்கள் வந்திருப்பதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த முடியும்,’’ என்று தெரிவித்தார்….

The post பாகிஸ்தானில் புதுப்பிக்கப்பட்ட இந்து கோயிலில் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: