அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். லாஸ் வேகாஸில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இரண்டடுக்கு குடியிருப்புகளில் நேற்று முன்தினம் பிற்பகலில் 4 பெண்கள் ஒரு ஆணும் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 13 வயது சிறுமி சுடப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் 40வயதும், மற்றவர் 50வயதும். மற்ற இரண்டு பெண்களும் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் அந்த ஆண் 20வயதும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 47 வயதான எரிக் ஆடம்ஸ் என்பவர் அடையாளம் காணப்பட்டார். சந்தேகத்திற்குரிய நபர் நேற்றையதினம் காலை உள்ளூர் வணிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

போலீசார் அவரை பிடிக்க முற்பட்ட போது அவர் துப்பாக்கியுடன் அருகில் உள்ள குடியிருப்பின் பின்புறத்திற்குள் ஓடிவிட்டார். போலீஸ் அதிகாரிகள் எரிக் ஆடம்ஸுக்கு துப்பாக்கியை கைவிட கட்டளையிட்டனர். ஆனால் அவர் அதை புறக்கணித்து தனது துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் 5 பேர் கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

The post அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: