நிலவின் மாதிரிகளை சேகரித்து கொண்டு சீனாவின் சாங்க்-6 விண்கலம் பூமிக்கு திரும்பியது

பீஜிங்: சீனாவின் சாங்க்-6 விண்கலம் நிலவில் இருந்து மண், பாறை மாதிரிகளை சேகரித்து கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. நிலவின் தொலைதூரப் பகுதிகளை ஆராய்ச்சி செய்யும் பணியில் சீனாவும் களமிறங்கி உள்ளது. நிலவில் மண், பாறை மாதிரிகளை ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையின் வென்சாங் ஏவுதளத்தில் இருந்து சாங்கே-6 விண்கலம் கடந்த மே 3ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஜூன் 1ம் தேதி நிலவின் தென் துருவத்தில் உள்ள மிகப்பழமையான, ஆழமான பள்ளத்தில் தரையிறங்கியது. அங்கு 2 நாட்கள் நிலவின் சுற்றுப்புறத்தில் இருந்தும், மேற்பரப்பில் இருந்தும் பாறை, தூசி, மண் ஆகிய மாதிரிகளை சேகரித்தது. ஜூன் 6ம் தேதி நிலவின் மேற்புறத்தில் இருந்து ஏவப்பட்டு ஆர்பிட்டருடன் இணைக்கப்பட்டது. ஜூன் 21ம் தேதி பூமிக்கு திரும்பும் பயணத்தை ஆர்பிட்டர் தொடங்கிய நிலையில் நேற்று சாங்கே-6 விண்கலம் மங்கோலியாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

The post நிலவின் மாதிரிகளை சேகரித்து கொண்டு சீனாவின் சாங்க்-6 விண்கலம் பூமிக்கு திரும்பியது appeared first on Dinakaran.

Related Stories: