கென்யாவில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலி


நைரோபி: கென்யாவில் வரியை உயர்த்த வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே விலைவாசி அதிகமாக உள்ள நிலையில் வரி உயர்வினால் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரி விதிப்பு தொடர்பாக நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடந்தது. இதை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் திடீரென வன்முறையாக மாறி நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியை அவர்கள் தீ வைத்து எரித்தனர்.

அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த எம்பிக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பியோடினர். வன்முறை கட்டுக்கடங்காததால் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 6 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர் என தகவல்கள் வந்தன. ஆனால்,‘‘ துப்பாக்கிசூட்டில் 13 பேர் இறந்தனர். 160 பேர் படுகாயமடைந்தனர்’’ என்று டாக்டர்கள் தெரிவித் துள்ளனர்.

The post கென்யாவில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: