தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 22 பேர் உடல் கருகி பலி!!

சியோல் : தென் கொரிய தலைநகர் சியோலில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள குவாசியாங் நகரில் உள்ள லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 35,000த்திற்கு மேற்பட்ட பேட்டரிகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் பேட்டரிகள் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை பணியாளர்கள் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை பலமணி நேரம் போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். 21 பேரின் உடல்களையும் மீட்டனர்.

தொழிற்சாலையில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தியபோது ஒரு தொழிலாளர் மாரப்படையால் உயிரிழந்ததை மீட்புப்படையினர் கண்டு பிடித்தனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் சீனர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உயிர் தப்பினர். விபத்து நடந்த தொழிற்சாலையை தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நேரில் சென்று பார்வையிட்டார்.

விபத்து நடந்தது பேட்டரி தொழிற்சாலை என்பதால் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

The post தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 22 பேர் உடல் கருகி பலி!! appeared first on Dinakaran.

Related Stories: