டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் பைடன் போட்டியிடுகின்றனர். அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் விவாத நிகழ்ச்சியில் பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்றனர். இவர்கள் விவாதத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் செயல்திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் மற்றும் டிரம்ப் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகைய நேரடி விவாத நிகழ்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்கினர். அந்த வகையில்,

அமெரிக்க அதிபர் தேர்தல் – பைடன், டிரம்ப் விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற நேரடி விவாதம் நடைபெற்றது.

சிறப்பாக ஆட்சி நடத்தினேன் – டிரம்ப் பேச்சு

கொரோனா போன்ற நெருக்கடி நேரத்திலும் எந்த பிரச்சனையும் இன்றி சிறப்பாக ஆட்சியை நடத்தினேன் என டிரம்ப் பேசினார். மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதாரத்துக்காக அதிக அளவில் எனது ஆட்சியில் செலவிடப்பட்டது. அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது. ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் விவகாரத்தில் பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தார். பைடன் அரசு கொண்டு வந்த வரிச்சலுகை திட்டம் குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவின் ஜனநாயகம், பொருளாதாரத்தை பைடன் அரசு சீரழித்து விட்டதாக டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தார்.

டிரம்ப் பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தினார் -பைடன்

டிரம்ப் எழுப்பும் கேள்விகளுக்கு அதிபர் ஜோ பைடன் நிதானமாக பதில் அளித்தார். அந்த வகையில், ட்ரம்ப் ஆட்சியில் வேலைவாய்ப்பின்றி அமெரிக்கர்கள் தவித்தனர் என பைடன் குற்றசாட்டு வைத்தார். டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார். டொனால்டு டிரம்ப் ஆட்சியில் வசதி படைத்தவர்களுக்கு சாதகமாகவே கொள்கைகள் வகுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

 

The post டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: