அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை தண்டனை


வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தம்பதியினர் ஹர்மேன்ப்ரீத் சிங்(31), குல்பீர் கவுர்( 43) ஆகியோர் தங்களது உறவினரான மைனர் சிறுவனை படிப்பதற்கு உதவுவதாக ஆசை வார்த்தை கூறி அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் குடியேற்ற ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டு அவரை தங்களது எரிவாயு நிலையம் மற்றும் கடையில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 3 ஆண்டுகளுக்கு குறைவான சம்பளம் கொடுத்து ஒரு நாளைக்கு 12 முதல் 17மணி நேரம் வரை வேலை செய்யச்சொல்லி சித்ரவதை செய்துள்ளனர்.

அவருக்கு போதுமான உணவு வழங்குவதை கட்டுப்படுத்தியதோடு, சரியான மருத்துவ உதவிகளையும் செய்ய வில்லை என தெரிகிறது. மேலும் கவுரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர். இது மூலமாக அந்த நபருக்கு இருக்கும் சொத்துக்களை பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில்ஹர்மேன்ப்ரீத் சிங்கிற்கு 11 ஆண்டுகள் குல்பீர் கவுருக்கு 7 ஆண்டுகள சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: