திருநங்கைகளை மனநோயாளிகளாக அறிவித்த அரசு: பெரு அரசின் புதிய சட்டத்திற்கு கடும் போராட்டம்

லிமா: திருநங்கைகளை மனநலம் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் என பட்டியிலிடுவதை நிறுத்துவதாக பெரு நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. திருநங்கைகள் என அடையாளம் காணப்படுபவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கு மருத்துவ உதவி தேவை எனவும் புதிய சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து லிமாவில் கடும் போராட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மே 2024 ல் நிறைவேற்றப்பட்ட சட்டம் திருநங்கைகள் மற்றும் குறுக்கு ஆடைகளை “மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்” என்று விவரித்தது. திருநங்கைகள் “நோய்களால்” கண்டறியப்பட்டு, “பொது மற்றும் தனியார் வழங்குநர்கள் மூலம் சுகாதார சேவைகளுக்கு” தகுதியுடையவர்கள் என்று சட்டம் கருதுகிறது. பெரு இப்போது “பாலின வேறுபாடு” என்ற சொல்லை மனநல மற்றும் நடத்தை சார்ந்த சுகாதார வகைப்பாடுகளின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்.

The post திருநங்கைகளை மனநோயாளிகளாக அறிவித்த அரசு: பெரு அரசின் புதிய சட்டத்திற்கு கடும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: