விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே விடுதலை: ஆஸ்திரேலியா சென்றார்


சைபான்: கடந்த 2010ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கா மேற்கொண்ட போர்கள் தொடர்பான ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரை குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அவர் தஞ்சம் புகுந்தார். கடந்த 2019இல் அவருக்கு அளித்துவந்த அடைக்கலத்தை ஈக்வடார் அரசு வாபஸ் பெற்றது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதால் அசாஞ்சே இங்கிலாந்தில் உள்ள பெல்மார்ஷ் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஆனால், அவர் ஏற்கனவே, இங்கிலாந்தில் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையான அசாஞ்சே நேற்று விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

The post விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே விடுதலை: ஆஸ்திரேலியா சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: