பாரதிராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன்: தங்கர் பச்சான்

சென்னை: தங்கர் பச்சான் இயக்கி உள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, அதிதி பாலன், கவுதம் மேனன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் தங்கர் பச்சான் பேசியதாவது: 2003ல் நான் எழுதிய ஒரு சிறுகதைதான் இந்த படம். வாழ்ந்து முடித்த ஒருவர், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து அன்புக்காக ஏங்கும் மற்றொருவர் இந்த இரண்டு பேர் போல உலகம் முழுக்க இருக்கிறார்கள். அன்புக்காக ஏங்கி தவிக்கிறார்கள்.

யாருக்கும் யார் மீதும் அன்பு இல்லை. அதைக் கூற வேண்டும் என்று நினைத்தேன். எல்லா ஊர்களிலும் சென்று வியாபாரம் செய்வது சிறந்த படமல்ல. எல்லா ஊர்களிலும் உள்ள மக்களைப் பற்றி எடுக்க வேண்டும். ஆனால், தரமான படங்களை யார் கொண்டாடுகிறார்கள். மக்கள் நல்ல படங்கள் திரையரங்கில் பார்க்கக் கூடாது, வீட்டில் தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். பாரதிராஜாவிடம் இந்த கதையைக் கூறிவிட்டு ஒரு வருடம் காத்திருந்தேன்.

நான் எடுத்த படத்தை பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்து இன்று பல பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் இல்லை. அப்போது யார் குற்றவாளிகள்? இந்த படத்தில் எல்லோரும் என்னைத் திட்டியிருப்பார்கள். பாரதிராஜா அண்ணன் இன்னமும் என்னை இப்படி செய்து விட்டான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல படைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

The post பாரதிராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன்: தங்கர் பச்சான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: